ஷாப்பிங் இணையதளம் குழந்தைகளை விற்றதா??? அமெரிக்காவில் வெடித்து இருக்கும் புது சர்ச்சை!!!
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் பிரபல இணையதளமான Wafair ஆன்லைனில் குழந்தைகளை விற்றதாகத் தற்போது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை ரெடிட் என்ற இணையத் தளத்தில் இருந்து PrincessPeach 1987 என்ற பெயரில் ஆதாரங்களுடன் கூறப்பட்டு இருக்கிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வேஃபர் இணையத் தளத்தில் விற்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் அதுவும் பர்னிச்சர் பொருட்கள் நம்பமுடியாத விலையுடன் விற்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. மேலும் பர்னிச்சர் பெயர்கள் கடந்த சில மாதங்களாக காணாமல் போன குழந்தைகளின் பெயர்களோடு ஒத்துப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்நிறுவனத்தின் பர்னிச்சர் பொருட்களின் பெயர்களை SKS (Stock Knowing Unit) எனக் குறிப்பிட்ட குறியீட்டு சொல்லுடன் தேடும் போது ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யாவின் இணையத் தேடுதளமான யாண்டெக்ஸ் உதவியோடு இந்தக் குறியீட்டை வைத்து தேடிப்பார்த்தால் ஆபாச வீடியோக்கள் காணப்படுகிறது என்ற செய்தியைத் தற்போது சிலர் ஆதாரங்களோடு நிரூபித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் பெயரிலும் மறைமுக அர்த்தம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. Waif என்றால் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று அர்த்தம் என்றும் Fare என்றால் வர்த்தகக் கட்டணம் அல்லது விலை என்று குறிப்பதாகவும் சில சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்திருக்கிறது.
நிரஜ் ஷா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் கடந்த 2002 இல் தனது நண்பர் ஸ்டீவ் சோனுடன் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. வேஃபர் நிறுவனம் மறைமுகமாக இப்படி குழந்தைகளை கடத்தி பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது என்றும் விற்பனைக்கு அவர்கள் பொருட்களின் பெயர்களையையும் விலையையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலுவான குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு வருகிறது. இந்தக் குற்றசாட்டுகளைத் தொடர்ந்து அந்நிறுவனம் விலை அதிகமாக நிர்ணயித்தப் பொருட்களை விற்பனை தளத்தில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் சர்ச்சை வெடித்து இருக்கிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்து “அதிக விலை துல்லியமாக விதிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் ஏன் இவ்வளவு அதிக விலை என்பதற்கான காரணத்தை விற்பனை முகவர்களிடமிருந்து பெற முடியாததால், தற்காலிகமாக அந்தப் பொருட்களை எங்கள் இணையதளத்திலிருந்து அகற்றியுள்ளோம்” எனத் தெரிவித்து இருக்கின்றனர். முன்னதாக ஜெஃபர் எப்ஸ்டின் என்பவர் குழந்தைகளை பாலியல் ரீதியிலான முறைகேடுகளுக்கு பயன்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப் பட்டு இருந்தார். மேலும் அவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற ரகசியங்கள் வெளியாகி இருக்கும் என்பதால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்து இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் காரச்சார விவாதங்கள் வைக்கப் பட்டு வருகின்றன.
அந்நாட்டின் FBI குழந்தைகள் விஷயத்தில் அதிகக் கவனத்தோடு செயல்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2 கோடி குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக அந்நாட்டின் International Labor Organization தகவல் தெரிவிக்கிறது. பாலியல் தொழிலுக்கு மட்டுமல்லாது குழந்தைகளை அடிமைகளாக விற்கும் பழக்கமும் அமெரிக்காவில் இருப்பதாக இந்த அமைப்பு தகவல் தெரிவிக்கிறது. அதிலும் கடத்தப்படும் 25 விழுக்காட்டு குழந்தைகள் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் ஆபாச வீடியோக்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாகவும் உலக நாடுகளில் இருந்து “செக்ஸ் டூரிஸம்” என்ற பெயரில் அதிக மக்கள் ஆண்டுதோறும் வந்து அமெரிக்காவிற்கு வந்து குவிவதாகவும் நேஷனல் அண்ட் கிராண்ட் அமைப்பு தகவல் தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலுக்கு அதிபர் ட்ரம்ப் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது.