ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி கேட்டாரா தமன்னா? அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

பிரபல நடிகைகள் தற்போது ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் சமந்தா உள்பட பலர் மிகப்பெரிய சம்பளத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் நடிகை தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இதற்கு தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்து வரும் 108 வது திரைப்படத்தை அனில் ரவிபுடி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை தமன்னாவை இயக்குனர் அணுகியதாகவும் ஆனால் ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னா ரூபாய் 5 கோடி கேட்டதாகவும் இதனால் இயக்குனர் அப்செட் ஆனதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது அனில் ரவிபுடி மற்றும் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா ஆகிய இருவர் மீது தனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு என்றும் இது போன்ற அடிப்படை இல்லாத பொய்ச் செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்றும் இந்த செய்திகள் தன்னை மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் அந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து அறிந்து வெளியிடவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமன்னாவின் இந்த விளக்கத்தை அடுத்து என்டிஆர் பாலகிருஷ்ணாவின் 108வது படத்தில் நடனமாட தமன்னாவை படக்குழுவினர் அணுகவே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.