ரூபெல்லா நோய்த்தொற்றை விருந்து வைத்து அழைத்தார்களா??? ஆச்சர்யமூட்டும் அணுகுமுறை!!!

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

தட்டம்மை போன்று தோலில் பொரி பொரியாகக் கொப்பளங்களை தோற்றுவிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோய்த்தொற்று ரூபெல்லா. இதன் அறிகுறியாக உடலில் காய்ச்சல் தென்படும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினை குறிவைத்து தாக்கும் இந்த நோய்த்தொற்று மற்ற நோய்கிருமிகளை விட சாதாரணமாகக் கருதப்பட்டாலும் இதுவும் ஆரம்பத்தில் கடும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிகளை இந்நோய்த் தொற்று தாக்கும்போது குழந்தை இறந்துவிடும் அபாயத்திற்கும் தள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூபெல்லா ஒரு பருவகால நோய்த்தொற்று போல  குளிர் காலத்தில் அதிகமாகவும் வசந்த காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலும் மேலை நாடுகளில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்நோய் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. 1969 க்குபின்னர் இந்த நோய்க்கு MMR தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு  நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலை நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்த நோயை எப்படி அணுகினார்கள் என்பதுதான் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரூபெல்லா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தானாக முன்வந்து  விருந்து வைத்து அந்நோய்த்தொற்றை அழைத்திருக்கிறார்கள். அதாவது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விருந்தில் திருமணமாகாத பெண்கள் பெரும்பாலும் கலந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா நிலைமையை மனத்தில் வைத்து, எதற்கு இத்தனை கொடூரம் என்ற கேள்விகூட எழலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படி கேள்விகள் எழுப்பப்பட வில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

ரூபெல்லா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் நோய்த்தொற்றை தானாகவே ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் முன்வந்திருக்கிறார்கள். ஒருமுறை இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகும்போது மீண்டும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது எனப் பல நாடுகளில் நம்பப்பட்டு இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்புகளும் வராது என்ற நோக்கத்தில் இளம் பருவத்தில் உள்ள பெண்கள் ரூபெல்லா நோய்த்தொற்று விருந்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதே அணுகுமுறையில் கொரோனாவை எதிர்கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஒருமுறை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற அடிப்படையான மருத்துவ காரணம் கொரோனாவிற்கு பொருந்தாது. ஏனெனில் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிய பலருக்கு மீண்டும் நோய்த் தொற்று தோன்றியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், நோய்த்தொற்றுகள் காலம் காலமாக இருக்கத்தான் செய்கின்றன. மனிதர்கள் அதை அணுகும் விதத்தையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதை ரூபெல்லா நமக்கு நினைவுப்படுத்துகிறது. 

More News

இனி, கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்!!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!!

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது

பெட்ரோல் இவ்வளவு மலிவா??? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிறுவனம்!!!

பிரிட்டனில் உள்ள பிரபல பெட்ரோல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சல்லிசாக பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது.

பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்!!! அச்சமூட்டும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிக&

ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய்

10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்