ரூபெல்லா நோய்த்தொற்றை விருந்து வைத்து அழைத்தார்களா??? ஆச்சர்யமூட்டும் அணுகுமுறை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தட்டம்மை போன்று தோலில் பொரி பொரியாகக் கொப்பளங்களை தோற்றுவிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோய்த்தொற்று ரூபெல்லா. இதன் அறிகுறியாக உடலில் காய்ச்சல் தென்படும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினை குறிவைத்து தாக்கும் இந்த நோய்த்தொற்று மற்ற நோய்கிருமிகளை விட சாதாரணமாகக் கருதப்பட்டாலும் இதுவும் ஆரம்பத்தில் கடும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிகளை இந்நோய்த் தொற்று தாக்கும்போது குழந்தை இறந்துவிடும் அபாயத்திற்கும் தள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூபெல்லா ஒரு பருவகால நோய்த்தொற்று போல குளிர் காலத்தில் அதிகமாகவும் வசந்த காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலும் மேலை நாடுகளில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்நோய் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. 1969 க்குபின்னர் இந்த நோய்க்கு MMR தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலை நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்த நோயை எப்படி அணுகினார்கள் என்பதுதான் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரூபெல்லா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தானாக முன்வந்து விருந்து வைத்து அந்நோய்த்தொற்றை அழைத்திருக்கிறார்கள். அதாவது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விருந்தில் திருமணமாகாத பெண்கள் பெரும்பாலும் கலந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா நிலைமையை மனத்தில் வைத்து, எதற்கு இத்தனை கொடூரம் என்ற கேள்விகூட எழலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படி கேள்விகள் எழுப்பப்பட வில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
ரூபெல்லா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் நோய்த்தொற்றை தானாகவே ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் முன்வந்திருக்கிறார்கள். ஒருமுறை இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகும்போது மீண்டும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது எனப் பல நாடுகளில் நம்பப்பட்டு இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்புகளும் வராது என்ற நோக்கத்தில் இளம் பருவத்தில் உள்ள பெண்கள் ரூபெல்லா நோய்த்தொற்று விருந்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதே அணுகுமுறையில் கொரோனாவை எதிர்கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஒருமுறை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற அடிப்படையான மருத்துவ காரணம் கொரோனாவிற்கு பொருந்தாது. ஏனெனில் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிய பலருக்கு மீண்டும் நோய்த் தொற்று தோன்றியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், நோய்த்தொற்றுகள் காலம் காலமாக இருக்கத்தான் செய்கின்றன. மனிதர்கள் அதை அணுகும் விதத்தையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதை ரூபெல்லா நமக்கு நினைவுப்படுத்துகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout