வருங்கால கணவர் விக்கிக்கு நன்றி : நயன்தாரா
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இதுவரை இருவரும் இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் இவர்களது காதலை பலர் உறுதி செய்தனர்
இந்த நிலையில் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா, 'இந்த விருது பெற காரணமாக இருந்த என் அப்பா, அம்மா, சகோதரர் மற்றும் காதலருக்கு நன்றி என்று கூறினார். மேலும் நான் இதுவரை பங்குபெற்ற விருது வழங்கும் விழாக்களில் இந்த விழா வித்தியாசமானது' என்று கூறினார்.
நயன்தாராவின் இந்த பேச்சில் காதலருக்கும் சேர்த்து நன்றி கூறியது அவர் விக்னேஷ் சிவனை காதலிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த காதல் ஜோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments