கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'ரஜினிமுருகன்' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார் என்பதும், 'விஜய் 60' படத்தில் அவர்தான் ஹீரோயின் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் 'இருமுகன்' படத்தை அடுத்து இயக்குனர் திரு இயக்கும் 'கருடா' படத்தில் நடிக்கும் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் திரு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கருடா படத்தில் காஜல் அகர்வால் மட்டுமே நாயகியாக நடிக்கின்றார். வேறு ஒரு நடிகை இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் உண்மைக்கு முறணானது. வேறு எந்த நடிகையையும் நாங்கள் அணுகவில்லை' என்று கூறியுள்ளார்.
இதிலிருந்தே கீர்த்தி சுரேஷ் செய்தி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்கவுள்ளது.
FYI News circulating regarding an actress refused to do #Garuda is completely false.The only actress we approached was Kajal Agarwal.
— Thiru (@dir_thiru) March 17, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com