ட்ரம்புடனான விருந்தை புறக்கணித்தாரா??? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இரண்டு நாள் அரசு சுற்று பயணம், அமெரிக்கா மற்றும் இந்தியர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு இந்தியா, குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து விருந்தும் வரவேற்பும் அளித்து கௌரவிப்பது வழக்கம். அந்த நிகழ்வின் போது நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் இடம் பெறுவார்கள்.

இன்று காலை 10 மணிக்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வுள்ளன.

இரவு குடியரசு தலைவர் மாளிகையில் அதிபருக்கு விருந்து அளிக்கப் பட இருக்கிறது. இந்நிகழ்வுக்கு காங்கிரஸின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப் பட்டு இருந்தது. அந்த அழைப்பை மன்மோகன் சிங் புறக்கணிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு அழைப்பு வரவில்லை, இதுவே மன்மோகன் சிங் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க காரணமாக இருக்கலாம் என்கிற ரீதியில் கருத்துக்கள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதே போல மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத்தும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று செய்திகள் பரவி வருகின்றன.