close
Choose your channels

ஏஆர் ரஹ்மானை விட அனிருத்துக்கு அதிக சம்பளமா? எத்தனை கோடி தெரியுமா?

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகை பொறுத்தவரை இசை புயல் ஏஆர் ரகுமான் தான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஏஆர் ரகுமான் சம்பளத்தை விட அனிருத் சம்பளம் உயர்ந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனிருத் தற்போது பிஸியான இசையமைப்பாளராக உள்ளார் என்பதும் கமல், ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தெலுங்கில் உள்ள பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இந்தியில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் இயக்கத்தில் உருவான ’ஜவான்’ படத்திற்கு இசையமைக்க அனிருத் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமானே ஒரு படத்திற்கு 8 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ’3’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், பத்தே ஆண்டுகளில் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment