ஒரே இடத்தில் அஜீத் மற்றும் பாலா

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் DI, அதாவது டிஜிட்டல் மற்றும் VFX பணிகள் ஜெமினி லேபில் நடைபெற்றது. இந்த பணியை பார்க்க அஜீத் ஜெமினி லேபிற்கு வருகை தந்திருந்தார். இதே நேரத்தில் இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தின் டப்பிங் பணியும் ஜெமினி லேபில் நடந்து கொண்டிருந்ததால், இயக்குனர் பாலாவும் அங்கு வருகை தந்திருந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் 'நான் கடவுள்' படத்தில் அஜீத் நடிக்கவிருந்ததும் அதன்பின்னர் ஒருசில காரணங்களால் இந்த படத்தில் இருந்து அஜீத் விலகியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜீத்தும் பாலாவும் ஒரே இடத்தில் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சந்தித்து பேசினார்களா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை எனினும் இரண்டு படக்குழுவினர்களும் இதை ஒரு அபூர்வ நிகழ்வாக கருதியதாக கூறப்படுகிறது.

More News

நடிகர் விவேக் மகன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னகுமார் நேற்று மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்த செய்தி அறிந்ததும்...

தனுஷ் தம்பி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

தனுஷின் அனைத்து படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத், தற்போது 'வேலையில்லா பட்டதாரி' ...

மும்பையின் முக்கிய தலைவருடன் கமல் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் ரிலீசாகவுள்ள...

அஜீத்தின் 'வேதாளம்' சென்சார் விபரங்கள்

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்தபடியே 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் வெளிவந்த தகவல் தெரிவிக்கின்றது...

தேசிய விருதை திருப்பி அளிப்பாரா வித்யாபாலன்?

எப்.டி.ஐ.ஐ மாணவர்களை ஆதரித்தும், நாட்டில் பெருகி வரும் மத சகிப்புத் தன்மையற்ற நிலையைக் கண்டித்தும் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்கள்,...