தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சென்னம்பள்ளி என்ற இடத்தில் உள்ள பழமையான கோட்டையில் தங்கம், வெள்ளி உள்பட விலைமதிப்புள்ள புதையல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த கோட்டையை சுற்றி ஐந்து இடங்களில் சுரங்கம் தோண்டி புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆந்திர அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  முதல் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒருமாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் யானைத்தந்தம், குதிரை எலும்புகள் ஆகியவை மட்டுமே கிடைத்தது. எதிர்பார்த்த தங்கம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த கிணறு ஒன்றின் வழியாக ஸ்கேன் கருவிகளை கொண்டு ஸ்கேன் செய்தபோது அந்த பகுதியில் ஒரு வைரமலை இருப்பதை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

12 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த வைரமலையில் இருந்து வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டால் அதன் மதிப்பு இந்திய பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் மத்திய அரசின் அனுமதி பெற்று வைரத்தை பிரித்தெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

More News

இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் ஜூலியின் முதல் படத்தின் ஷாக்கிங் டைட்டில்

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களிடம் புகழ் பெற்றவர் ஜூலி.

'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்: ரசிகர்கள் முன் பேசிய சூர்யா

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது

இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.