தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்
- IndiaGlitz, [Thursday,January 11 2018]
ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சென்னம்பள்ளி என்ற இடத்தில் உள்ள பழமையான கோட்டையில் தங்கம், வெள்ளி உள்பட விலைமதிப்புள்ள புதையல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த கோட்டையை சுற்றி ஐந்து இடங்களில் சுரங்கம் தோண்டி புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆந்திர அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருமாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் யானைத்தந்தம், குதிரை எலும்புகள் ஆகியவை மட்டுமே கிடைத்தது. எதிர்பார்த்த தங்கம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த கிணறு ஒன்றின் வழியாக ஸ்கேன் கருவிகளை கொண்டு ஸ்கேன் செய்தபோது அந்த பகுதியில் ஒரு வைரமலை இருப்பதை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
12 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த வைரமலையில் இருந்து வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டால் அதன் மதிப்பு இந்திய பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் மத்திய அரசின் அனுமதி பெற்று வைரத்தை பிரித்தெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.