ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வீடு, கார் பரிசு: ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு வைர வியாபாரி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பதக்கம் வென்று வந்தால் அவர்களுக்கு வீடு கட்ட பணம், வீடு இருப்பவர்களுக்கு கார் வழங்கவுள்ளதாக குஜராத் வைர வியாபாரி சவிஜ் தோலாக்கியா என்பவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வைர வியாபாரி சவிஜ் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு வீடு கார் போன்ற பரிசுகள் வழங்கி பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒலிம்பிக்கில் விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கத்துடன் நாடு திரும்பினால் அவர்களுக்கு வீடு கட்ட தலா 11 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே வீடு இருக்கும் வீராங்கனைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை போட்டியில் பிரிட்டனை எதிர்கொள்கிறது என்பதும் இந்த போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ள நிலையில் அந்த அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.