ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் வருமா?

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோய் பீதியை கிளப்பி வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நீரிழிவு நோயாளிகளுக்கே இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது குஜராத்தில் 13 வயது சிறுமி ஒருவருக்கு இந்த பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சைகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கி விட்டனர்.

இந்நிலையில் ஒரே மாஸ்க்கை அதிக முறை தொடர்ந்து பயன்படுத்தும்போது கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். அதாவது துணிகளால் ஆன மாஸ்க்குகள் ஈரத்துடன் இருப்பதால் அதில் பூஞ்சைகள் தொற்றி கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே துணிகளால் ஆன மாஸ்க்கை பயன்படுத்தும்போது அதிக முறை ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அறுவை சிகிச்சை மாஸ்க் மற்றும் துணி மாஸ்க்கை நாள் ஒன்றுக்கு ஒரு மாஸ்க் என்கிற ரீதியில் தூய்மையான முறையில் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை துணி மாஸ்க் ஈரம் ஆன நிலையில் அதை உடனடியாக மாற்ற வேண்டும். அதோடு N95 மாஸ்க்கை பயன்படுத்துவர்கள் கூட 5 முறைக்கு மேல் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றைத் தவிர கொரோனாவின் விளைவுகளால் ஏற்படும் கருப்பு பூஞ்சை போன்ற நோய்கள் தற்போது இந்தியாவில் தீவிரம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் 7,000 பேர் அவதியுற்று வருவதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள் மேலும் கொரோனா நேரத்தில் சுவாசக் கோளாறால் அவதியுற்றவர்கள் இந்த கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்த்தொற்று குறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும் குளிர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து நேரடியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜனை செலுத்துவதாலும் இந்த கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஆக்சிஜன் பயன்பாடு, ஸ்டீராய்டு பயன்பாடு, இரத்த்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் ஈரப் பதத்துடன் மாஸ்க்குகள் அணிவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

More News

தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு! 

இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கிறது அனைவர் மீதும் தங்களது அன்பையும்

திருப்பூர் இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: இயக்குனர் ரவிகுமார் வேதனை!

கொரோனா குறித்து மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு இல்லை என்றும் தற்போது முதல் ஐந்து இடங்களில் கொரோனா பாதிப்பில் இருக்கும் திருப்பூர், இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

துணி, நகைக்கடைகளில் குவியும் கூட்டம்: அரசின் தவறான முடிவு காரணமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென நேற்று இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

'தளபதி 67' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களா?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'தளபதி 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில்

'குக் வித் கோமாளி' கனியின் திருமண புகைப்படம்: இன்னும் அப்படியே இருக்காரே?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்து ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ஹாட்ஸ்டாரில் பலர் அந்த நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர்.