பேட்ட- விஸ்வாசம்: துருவ் விக்ரமின் முதல் சாய்ஸ் எது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைவர் ரஜினியின் பேட்ட' தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவருவதால் இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்று பலருக்கு குழப்பமாக உள்ளது. இதே குழப்பம் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினர் பலருக்கும் உள்ளது.
இந்த நிலையில் சீயான் விக்ரமின் மகனும் 'வர்மா' படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'வரும் 10ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சியில் 'பேட்ட' படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், இருப்பினும் தனுஷின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், வடசென்னை, மாரி 2 ஆகிய திரைப்படங்களை சமீபத்தில் பார்த்து ரசித்ததாகவும் துருவ் விக்ரம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பா விக்ரமிற்காக கதைகள் வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் அவர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் திட்டம் இருப்பதாகவும் துருவ் விக்ரம் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout