நேற்று வரை நட்சத்திரம், இன்று முதல் சாமி: பிசி ஷெட்யூலில் விக்ரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் வெளிநாட்டுக்கு சென்று ஒருசில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கும் நடிகர்கள் மத்தியில் நேற்று ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சீயான் விக்ரம்
ஆம், விக்ரமின் கடுமையான உழைப்பு குறித்து அனைவரும் அறிந்ததுதான். வுதம்மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை நேற்று முடித்த விக்ரம், இன்று ஹரி இயக்கவுள்ள 'சாமி 2' படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபிசிம்ஹா, பிரபு, டெல்லி கணேஷ், சூரி உள்பட பல நடிக்கவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். ஷிபுதமீன்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும்.
விக்ரம் ஏற்கனவே விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments