கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸில் முந்திய படம் எது?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கடந்த வார நிலை குறித்து தற்போது பார்ப்போம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ல் விஜய்யின் 'பைரவா' ரிலீஸ் ஆவதால் கடந்த வெள்ளியன்று எந்த புதிய படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் முந்தைய வாரங்களை போலவே கடந்த வாரமும் அமீர்கானின் 'டங்கல்' சென்னை வசூலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த படம் கடந்த வாரம் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 210 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.55,83,650 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.3,87,84,420
அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16', சென்னையில் கடந்த வாரம் 14 திரையரங்க வளாகங்களில் 170 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.52,32,260 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.79,10,490 ஆகும்
விஷாலின் 'கத்திச்சண்டை' கடந்த வாரம் சென்னையில் கடந்த வாரம் 9 திரையரங்க வளாகங்களில் 56 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.7,68,700 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.2,13,66,900 ஆகும்
வெங்கட்பிரபுவின் சூப்பர் ஹிட் படமான 'சென்னை 28 II' திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 8 திரையரங்க வளாகங்களில் 60காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,87,560 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.3,38,08,460 ஆகும்
விஜய்வசந்த், சமுத்திரக்கனி நடித்த 'அச்சமின்றி' திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 8 திரையரங்க வளாகங்களில் 40 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.3,35,240 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.17,86,050 ஆகும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com