மீண்டும் ரிலீஸான 'ஒருமனம்' பாடல்.. ஆனால் மிகப்பெரிய மாற்றம்.. 'துருவ நட்சத்திரம்' அப்டேட்..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பதும் தற்போது இந்த படம் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் ‘ஒரு மனம்’ என்ற பாடல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இந்த பாடலில் விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அதே பாடல் மீண்டும் ரீரிலிஸ் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள பாடலில் விக்ரம், ரிதுவர்மா ஆகிய இருவர் மட்டுமே உள்ளது என்பதும் ஐஸ்வர்யா காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் அதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை எழுதிய இந்த பாடலின் புதிய வடிவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.