'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரன்னிங் டைம் குறித்த தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் கடந்த ஏழு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பு மற்றும் தொழில் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடங்க பட குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் சென்சாருக்கு சென்ற நிலையில் தற்போது சென்சார் பணிகள் முடிந்து உள்ளது. 2 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.