ஆதித்த கரிகாலன் விக்ரம் வசனத்தை வேற லெவலில் பேசிய துருவ் விக்ரம்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் பேசிய வசனங்களை அவரது மகன் துருவ் விக்ரம் அவரை போலவே நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.500 கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான நட்சத்திரங்களை தேர்வு செய்ததே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அவரது நடிப்பு சூப்பராக இருந்தது என படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் பேசிய ஆவேசமான வசனமான 'இந்த கள்ளும், இந்த பாட்டும், ரத்தமும் போர்களமும் எல்லாமே அவளை மறக்கத்தான்.. அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான்’ என்ற வசனத்தை விக்ரம் போலவே பேசிக் காட்டியது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Dhruv Vikram making it bigger in stage with @chiyaan’s #AdithaKarikalan signature dialogues. pic.twitter.com/TauStUzhnr
— Venkatramanan (@VenkatRamanan_) October 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com