நயன்தாரா படப்பாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்த துருவ் விக்ரம்

  • IndiaGlitz, [Thursday,August 01 2019]

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து முடித்துள்ள முதல் படமான 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் படம் வெளியாகும் முன்னரே துருவ் விக்ரம் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டார். அவர் பெண்கள் கல்லூரி ஒன்றின் விழாவில் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது தனது முதல் படத்தின் அனுபவங்கள், நடிப்பு பழகியது உள்பட பல சுவாரஸ்மான விஷயங்களை தெரிவித்தார். மேலும் கல்லூரி மாணவிகளின் பெரும் கரகோஷத்துக்கு இடையே 'ஆதித்ய வர்மா' படத்தின் டிரைலரும் விழா மேடையிலேயே திரையிடப்பட்டது

இந்த நிலையில் இதே விழாவில் மாணவிகள் சிலர் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த பாடலுக்கு மாணவிகள் சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து ஆச்சரியம் அடைந்த துருவ் விக்ரம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்