இவருடன் இணைவதில் இணையில்லா மகிழ்ச்சி: அடுத்த பட இயக்குனரை அறிவித்த துருவ் விக்ரம்!
- IndiaGlitz, [Friday,January 01 2021]
தமிழ் திரை உலகின் இளம் நடிகரும் சியான் விக்ரம் மகனுமான துருவ் விக்ரம், ‘ஆதித்யவர்மா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார் என்பதும் அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படமொன்றில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. துருவ் விக்ரமின் மூன்றாவது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் இந்த தகவலை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்று உறுதி செய்துள்ளா.ர்
’பரியேறும் பெருமாள்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தனுஷின் ’கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இவரது மூன்றாவது படமும் துருவ் விக்ரமுடன் இணையும் படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணிபுரியவுள்ளது குறித்து துருவ் விக்ரம் கூறியபோது, ‘இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுடன் அடுத்த படத்திற்காக இணைவதில் நான் மிகவும் இணையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாரி செல்வராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.