துருவ் விக்ரமை கட்டிப்பிடித்த இளம்பெண் யார்? வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் துருவ் விக்ரமை கட்டி பிடித்த இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ’வர்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் தந்தை விக்ரமுடன் ’மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் துருவ் விக்ரம் தனிப்பட்ட மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். அந்த மியூசிக் வீடியோ குறித்தும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவின் ஒரு சிறு பகுதியை தற்போது துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் துருவ் விக்ரம் மற்றும் உஜால் குப்தா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் துருவ் விக்ரமை ஒரு இளம்பெண் கட்டிப் பிடிப்பது போன்ற காட்சி உள்ளதை அடுத்து அந்த இளம் பெண் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த இளம்பெண் துருவ் விக்ரமுடன் மியூசிக் வீடியோவில் நடித்தவராக இருக்கலாம்.
இந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்தப்பட்டு இருப்பதுபோல் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் தென்படுகின்றன. இதனால் இந்த வீடியோவுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#DhruvVikram shares an exciting update on his Track 1 - Official Music Video Announcement dropping soon ??
— Yuvraaj (@proyuvraaj) August 24, 2022
--> https://t.co/6fwCTF6pBP pic.twitter.com/g2cmrj1g3a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com