பிரபல இசையமைப்பாளர் ஸ்டுடியோவில் துருவ் விக்ரம்: பாடகர் ஆகின்றாரா?

பிரபல இசையமைப்பாளர் ஸ்டூடியோவில் துருவ் விக்ரம் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவர் பாடகராக மாறுகின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், ’ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும் தற்போது அவர் தந்தை விக்ரமுடன் ’மஹான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஸ்டூடியோவில் துருவ் விக்ரம் இருப்பது போன்ற வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் ஒரு பாடல் பாட போகின்றாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் கபடி விளையாட்டை சார்ந்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டது. அதேபோல் துருவ்விக்ரமின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் ஒரு இளம் வாலிபரின் துடிப்பான ரொமான்டிக் படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.