close
Choose your channels

துருவ் விக்ரம் நடித்த 'வர்மா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Sunday, December 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்து வந்த 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினம் வரும் மாதத்தில் காதல் படம் ஒன்று வெளிவருவது மிகப்பொருத்தமானதாக கருதப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக மேகா செளத்ரி என்ற கொல்கத்தாவை சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'காலா' புகழ் ஈஸ்வரிராவ், பிக்பாஸ் புகழ் ரைசாவில்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment