close
Choose your channels

டார்ஜிலிங்கில் துருவ் விக்ரம்: வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’சியான் 60’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டார்லிங் பகுதியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், துருவ் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டார்ஜிலிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் வெளியாகி 15 நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் அதற்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பகுதியின் படப்பிடிப்பு முடித்து விட்டு டார்ஜிலிங்கில் இருந்து துருவ் விக்ரம் சென்னை திரும்பினார் என்றும் படக்குழுவினர் டார்ஜிலிங்கில் இருந்து நேபாளம் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment