துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரும்பாத நிலையில் இதே படம் மீண்டும் ஒருமுறை வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
கிரிசய்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம் ஜோடியான பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம் நண்பராக அன்புதாசன் நடித்துள்ளார். இவர் கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
#DhruvVikram's #AdithyaVarma wrapped up????
— #AdithyaVarma Movie (@AdithyaVarma_) May 14, 2019
• @e4echennai • @E4Emovies •@dop007 @BanitaSandhu @PriyaAnand
Follow Official @AdithyaVarma_ pic.twitter.com/2PqhheZd3T
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments