close
Choose your channels

எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்டா... 'ஆதித்ய வர்மா டிரைலர்

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் அதே படம் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படமானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பாலாவின் ‘வர்மா’ டிரைலரில் வசனமே இன்றி வெறும் காட்சிகள் பின்னணியில் பாடலுடன் இருந்த நிலையில் ஆதித்ய வர்மா’ டிரைலரில் படத்தின் கதையை ஓரளவு புரிந்து கொள்ளும் வகையில் வசனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டரான துருவ், போதைபொருள் பயன்படுத்தியது, அதற்கான விசாரணைகள், போதைக்கு காரணமான காதல் தோல்வி, கோபத்தை கட்டுப்படுத்த முடியாத இளைஞன், மீராவுடன் காதல், பெற்றோர் எதிர்ப்பு, காதல் தோல்வி, காதலிக்கு வேறொருவருடன் திருமணம் என டிரைலரில் இருந்தே கதையை கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் படத்திலேயே ஆக்சன், ரொமான்ஸ், கோபம், இளமைத்துள்ளல் என துருவ் விக்ரம் ஒரு ஹீரோவாக தேறிவிடுவார் என்றே தோன்றுகிறது. இருப்பினும் நாயகி விஷயத்தில் ‘வர்மா’வின் ஷாலினி பாண்டேவை ‘ஆதித்ய வர்மா’வின் பனிதா சாந்து முந்துவாரா? என்பது படம் வெளிவந்தால்தான் தெரியும்.

ஆக்சன் காட்சிகள் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளது. ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் பணிபுரிந்தவர் என்றாலும் ‘ஆதித்ய வர்மா’வை ஒரு புதிய படம் போல் இயக்குனர் கிரிசய்யா இயக்கியுள்ளார். ராதானின் துள்ளல் இசை, ரவி கே சந்திரனின் அபாரமான கேமிரா படத்திற்கு மேலும் வலுவூட்டும். மொத்தத்தில் சியான் வாரிசுக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment