துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' சென்சார் தகவல்கள் மற்றும் புதிய ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் ’ஆதித்யவர்மா’ என்ற பெயரில் அதே படம் மீண்டும் தயாரானது.

’ஆதித்யவர்மா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படம் ராதன் இசையில் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.