துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுதான்.. 2 நாயகிகள் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மாரி செல்வராஜின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’பைசன் காளமாடன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…

என்று மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டருக்கு கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகிய இரண்டு நாயகிகளுடன் மலையாள நடிகர் லால், பசுபதி, , கலையரசன் உள்பட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும், எழிலரசு ஒளிப்பதிவாளராகவும், சக்தி திரு பட தொகுப்பாளராகவும், ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாகவும் அட்டகாசமாகவும் இருப்பது மட்டுமின்றி டைட்டிலும் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.