கார் விபத்து எதிரொலி: விக்ரம் மகன் துருவ் கைது

  • IndiaGlitz, [Sunday,August 12 2018]

சென்னை தேனாம்பேட்டையில் இன்று அதிகாலை சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானதில் மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்ததுடன் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கார் விபத்தை ஏற்படுத்திய துருவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் துருவ் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

துருவ் ஓட்டி வந்த காரில் அவருடன் நான்கு நண்பர்கள் இருந்ததாகவும், அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.