முதல் பட சம்பளத்தை விக்ரம் மகன் துருவ் யாரிடம் கொடுத்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் மகன் துருவ், தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'வர்மா' படத்தில் அறிமுகமாகிறார் என்பது தெரிந்ததே. 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தன்னுடைய முதல் படத்தில் கிடைத்த சம்பளம் முழுவதையும் நடிகர் துருவ் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். துருவ்வின் நல்ல மனதை சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.
துருவ், மேகா செளத்ரி, 'காலா' புகழ் ஈஸ்வரிராவ், 'பிக்பாஸ் புகழ்' ரைசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராதன் இசையமைக்கின்றார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments