அஜித் இடத்தை ஒருசில மாதத்தில் பிடித்த விக்ரம்

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

தல அஜித் நடித்து வந்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 97% ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்ததாகவும் சென்னையில் வெறும் 3 சதவீதமே படப்பிடிப்பு நடந்ததாகவும் சமீபத்தில் இயக்குனர் சிவா பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில்தான் நடந்தது. இதுவரை தமிழ் சினிமா காணாத அழகிய லொகேஷனில் இந்த படத்டின் படப்பிடிப்பு நடந்ததாக வெளிவந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரவியதை அடுத்து பல இயக்குனர்கள் பெல்ஜியம் சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் நடைபெறுகிறது. அஜித் படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் முடிந்த சில மாதங்களில் அதே நாட்டில் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களை அடுத்து இன்னும் ஒருசில தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாரா படத்தில் ஹாங்காங் சைக்கிள் ஸ்டண்ட் கலைஞர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்....

ஜூலியை ஏமாற்றிய ஸ்ரீ! பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 15 பேர்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார் என்பது விதிமுறைகளில் ஒன்று...

பிக்பாஸ் 4வது நாள்: ஓவியா-சினேகன் மோதலும் கட்டிப்பிடித்தலும்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசிலரின் வரவேற்பையும் பலரின் கேலி, கிண்டல்களையும் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது...

ஜார்ஜியாவில் குழந்தைகள் கண்முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாய்: இருவர் கைது

ஜார்ஜியா நாட்டில் இரண்டு குழந்தைகள் முன் இரண்டு டீன் ஏஜ் இளைஞர்கள் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது...

கன்னட திரைப்பட விழாவில் தமிழில் கெத்து காட்டி பேசிய விஷால்

கடந்த பல வருடங்களாக தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இருமாநில பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமின்றி திரையுலகினர்களையும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.