விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': மாஸ் வீடியோவை ரிலீஸ் செய்த படக்குழு..!

  • IndiaGlitz, [Monday,July 17 2023]

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

வெறும் 19 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. His Name Is John என்ற இந்த பாடலை தாமரை எழுதியுள்ளார் என்பதும் ஹாரிஸ் ஜெயராஜ் கம்போஸ் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

விஷால் -ஹரி படத்தின் நாயகி இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஷால் நடிக்க இருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினிகாந்த் - லோகேஷ் படத்தில் இணையும் 'லியோ' நடிகர்.. இதுவும் LCU படமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் 'லியோ' படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர்

மனிதர்களுக்கு வயது அதிகரிப்பதை தடுக்கும் அசத்தலான புது கண்டுபிடிப்பு!

முன்னதாக வயது அதிகரிப்பதைத் தடுப்பதற்கு மரபணு ரீதியான சிகிச்சையை ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர்

விஷ்ணு விஷால் பிறந்த தினத்தில் தான் இதுவும் நடந்தது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறப்பு பதிவு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா இந்த தேதியிலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.