close
Choose your channels

ஆதித்யவர்மா துருவ் விக்ரமுக்கு மீண்டும் சிக்கல்!

Tuesday, November 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பாக இளைஞர்களிடமும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதால் புகை பிடிக்கும் காட்சியில் நடித்த துருவ் விக்ரமுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனரிடம் இருந்து துருவ் விக்ரம் உள்பட படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மருத்துவர்கள் சங்கத்திலிருந்து துருவ் விக்ரம் கேரக்டருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்ய வர்மா படத்தில் சர்ஜரி செய்யும் துருவ் விக்ரமின் டாக்டர் கேரக்டர் குடித்துவிட்டு சர்ஜரி செய்வதாக உள்ள காட்சிக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த காட்சி பொதுமக்களிடம் மருத்துவர்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும் என்று மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த கண்டனத்தால் துருவ் விக்ரமுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment