துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கப்பட்டுள்ள நிலையில் அதே படம் வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் 'ஆதித்யவர்மா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே!

இந்த படத்தின் படப்பிடிப்பு சிறிது காலமானதால் இந்த படமும் கைவிடப்பட்டதாக வதந்திகள் கிளம்பின. ஆனால் வதந்தியை பொய்ப்பிக்கும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'ஆதித்யவர்மா' படத்தின் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.

E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தை 'அர்ஜூன் ரெட்டி' தெலுங்கு படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கிரிசய்யா இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக பனிதா சந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ப்ரியா ஆனந்த் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார்

ரஜினி-விக்னேஷ் சிவன் சந்திப்பு! அடுத்த படத்தை இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

கவுதம் மேனனுடன் இணைந்த அனிருத்!

இதுவரை கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.

என் வாய்தான் என் எதிரி: லதா விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி

எம்ஜிஆர்-லதா குறித்து நடிகை கஸ்தூரி பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பது தெரிந்ததே.

சூர்யா, கார்த்தியை சந்தித்த டி.ராஜேந்தர்

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக பிரலங்களை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.