'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்

சியான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விக்ரமின் அடுத்த படமான ‘விக்ரம் 60’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக துருவ் புதிய லுக்கில் தோற்றமளிக்கின்றார். இந்த புதிய லுக்கிற்காக அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதாக தெரிகிறது. துருவ் விக்ரமின் புதிய லுக் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு படத்தின் லுக்கிற்காக விக்ரம் எந்த அளவுக்கு மெனக்கிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் துருவ் விக்ரமும் இந்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து புதிய லுக்கில் தோற்றமளிக்கின்றார்.