கூகுளில் தேடினாலும் கிடைக்காத ஹேர்ஸ்டைல்: பாலாவிடம் சிக்கிய துருவ்?
- IndiaGlitz, [Monday,March 05 2018]
இயக்குனர் பாலா படம் என்றால் ஹீரோக்களின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். கூகுளில் தேடினால் கூட இதுபோன்ற ஒரு ஹேர்ஸ்டைலை கண்டுபிடிக்க முடியாதவாறு பாலா தனது ஹீரோக்களின் ஹேர்ஸ்டைலை மாற்றிவிடுவார். இதற்கு சீயான் விக்ரமின் மகன் துருவ் விதிவிலக்கல்ல என்பதை போல் துருவ்வின் சமீபத்திய புகைப்படங்கள் நிரூபித்துள்ளது. இந்த படம் முடியும்வரை பாலாவின் கையில் துருவ் ஹேர்ஸ்டைல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார் என்பதும் 'வர்மா' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 முதல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தனது மகனின் முதல் படப்பிடிப்பை நேரில் காண விக்ரமும் நேபாளம் சென்றுள்ளார். அங்கு துருவ்வின் ஹேர்ஸ்டைலை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் விக்ரம் பதிவு செய்துள்ளார். தாடி மீசையுடன் ஹேர்பேண்ட் உடன் கூடிய துருவ் ஹேர்ஸ்டைல் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ரீமேக் படமாக இருந்தாலும் அதில் பாலா ஸ்டைல் கண்டிப்பாக இருக்கும் வகையில் இந்த படம் உருவாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.