நாடகக்காதல்: இயக்குனர் நவீனுக்கு 'திரெளபதி' இயக்குனரின் கேள்வி!
- IndiaGlitz, [Wednesday,January 29 2020]
சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படத்தின் டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நாடகக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தை ஒரு பிரிவினர் ஆதரித்தும், இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவரை வாலிபர் ஒருவர் நாடகக் காதல் மூலம் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு மீண்டும் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டது குறித்த செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் வீடியோவை மேற்கோள் காட்டிய ‘திரெளபதி’ இயக்குனர் ஜி மோகன் தனது சமூக தளத்தில் கூறியதாவது: நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே இயக்குனர் நவீன் பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இயக்குனர் நவீன், ‘திரெளபதி’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘திரெளபதி’ இயக்குனர் ஜிமோகன், நவீனுக்கு இந்த கேள்வியை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே @NaveenFilmmaker பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்.. https://t.co/2Qo7mqJ854
— Mohan G ?? (@mohandreamer) January 29, 2020