'தூம் 4' தயாரியுங்கள்: போனிகபூருக்கு ஐடியா கொடுக்கும் அஜித் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

தல அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இன்று காலை போனிகபூர் தனது டுவிட்டரில் அஜித்தை பாலிவுட்டுக்கு அழைத்து வருவேன், அவருக்காக மூன்று கதைகள் வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார். இந்த டுவீட் இன்று காலை முதல் டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனிகபூருக்கு அஜித் ரசிகர்கள் எந்த படத்தை அவர் தயாரிக்கலாம் என்று பல்வேறு ஐடியாக்களை கொடுத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான ரசிகர்கள் 'தூம் 4' தயாரிக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தூம் படத்தின் மூன்று பாகங்களிலும் ரேசிங் காட்சிகள் அதிகம் இருக்கும். அஜித் ஒரு உண்மையான ரேசிங் சாம்பியன் என்பதால் அவருக்கு அந்த படம் பொருத்தமாக இருக்கும் என்றே பலர் கருதுகின்றனர்.

'தூம் 1' படத்தில் ஜான் ஆபிரஹாமும், 'தூம் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனும், 'தூம் 3; படத்தில் அமீர்கானும் நெகட்டிவ் ஹீரோ கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த மூன்று படங்களிலும் அபிஷேக்பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் 'தூம் 4' படத்தில் அஜித் நெகட்டிவ் ஹீரோ கேரக்டரிலும், அபிஷேக்பச்சன் போலீஸ் கேரக்டரிலும் நடித்தால் அந்த படம் உலக அளவில் ஹிட்டாகும் என்றே கருதப்படுகிறது. அஜித் ரசிகர்களின் ஆசையை போனிகபூரும், அஜித்தும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

நல்ல உழைக்கணும், நாற்பதிலும் ஜெயிக்கணும்: விஜயகாந்தின் ஒருவரி பேட்டி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின்னர் முதல்முறையாக ஒரு வரியில் பதில் சொல்லும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சூர்யாவின் 'என்.ஜி.கே.' சிங்கிள் குறித்த புதிய தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக

10 லட்ச ரூபாயில் ஒரு தமிழ்ப்படம்: வரும் வெள்ளியன்று ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஹீரோக்கள் சம்பளம் கோடியில், ஹீரோயின்கள் சம்பளம் லட்சத்தில் காமெடி நடிகர்களின்

அட்லி அலுவலகத்தில் ஷாருக்கான்: அப்ப அது உண்மைதானா?

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வந்திருந்தார்

விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கிய தல தோனி!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றது.