தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய ‘காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த புத்தகத்தை வெளியிட தல டோனி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தல தோனி, 'சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை தன்னால் வெளிப்படுத்த முடிந்தததாகவும் கூறினார்.
மேலும் சென்னை அணி எப்போதுமே கடினமாகவும், நேர்மையாகவும் விளையாடும் என்றும், ஆக்ரோஷத்தை நிதானபடுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு தனக்கு உதவியதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் தோனி பேசிய முழுமையான பேச்சை கீழே உள்ளே வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments