தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய ‘காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த புத்தகத்தை வெளியிட தல டோனி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தல தோனி, 'சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை தன்னால் வெளிப்படுத்த முடிந்தததாகவும் கூறினார்.

மேலும் சென்னை அணி எப்போதுமே கடினமாகவும், நேர்மையாகவும் விளையாடும் என்றும், ஆக்ரோஷத்தை நிதானபடுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு தனக்கு உதவியதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் தோனி பேசிய முழுமையான பேச்சை கீழே உள்ளே வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்

 

More News

குழந்தை பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மரண தண்டனையை உலகின் பல நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை அமலில் உள்ளது.

முடிவுக்கு வந்தது அர்ஜூனின் அடுத்த படம்

ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் 2018ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று.

200 அடியில் பேனர்: ஆரம்பமாகிறது விஸ்வாசம் திருவிழா

தல அஜித் நடித்த விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் திருநாள் விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

பிரபல நடிகரின் 2 வங்கிக்கணக்குகள் முடக்கம்: ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் அதிரடி

பிரபல தெலுங்கு நடிகரும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தின் நாயகனுமான மகேஷ்பாபுவின் இரண்டு வங்கிக்கணக்குகளை ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

மீண்டும் டப்பிங் யூனியனில் சேர சின்மயிக்கு நிபந்தனை

கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு மற்றும் டப்பிங் யூனியன் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி பாடகி சின்மயி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்