ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்- பெள்ளியை சந்தித்த தோனி… என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் விருதுபெற்ற தம்பதி பொம்மன்- பெள்ளி இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை வாழ்த்திய தோனி தனது பெயர் பதித்த ஜெர்சியை பரிசாகக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
முதுமலை காடுகளில் தாயைவிட்டு பிரிந்துவாழும் குட்டி யானைகளைப் பராமரிப்பது தொடர்பாக பெண் இயக்குநர் கார்த்திகி கோன்சாலவஸ் என்பவர் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ எனும் பெயரில் ஆவணப்படம் எடுத்திருந்தார் என்பதும் இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இதில் யானைகளுடன் இருக்கும் தங்களது பந்தத்தையும் தங்களது வாழ்வியலையும் தத்ரூபமாக எடுத்துக்காட்டிய பொம்மன்- பெள்ளி தம்பதியினருக்கு தற்போது பெரிய வரவேற்பு இருந்துவருகிறது.
அந்த வகையில் பொம்மன் – பெள்ளி தம்பதியினரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சமீபத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படக் குழு நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க நேரில் வந்திருந்தனர். அப்போது பொம்மன்- பெள்ளி தம்பதியினரைச் சந்தித்த தோனி அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து தனது பெயர் பதித்த ஜெர்சியை பரிசாகக் கொடுத்து கவுரப்படுத்தி உள்ளார்.
மேலும் இயக்குநர் கார்த்திகி கோன்சாலவஸ் மற்றும் பொம்மன் – பெள்ளி தம்பதியினரை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்குக் காசோலை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Jab they met ❤️ #TheElephantWhisperers 🐘 #MSDhoni @EarthSpectrum #WhistlePodu #Yellove 🦁 #TNForest #mudumalai @ChennaiIPL pic.twitter.com/oHErropfZk
— Supriya Sahu IAS (@supriyasahuias) May 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout