தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார் என்றும், இதற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

கடலூர் மாவட்டம் அரங்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற இந்த ரசிகரின் வீடு குறித்த தகவல் அறிந்ததும் சமீபத்தில் பேட்டி தோனி, அந்த ரசிகருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்த அளவுக்கு அன்பு காட்டும் ரசிகர்களை நினைக்கும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தோனி தனது வீட்டை நேரில் வந்து பார்க்க வேண்டும் என கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தோனி சார் வரை என்னுடைய வீடு குறித்த தகவல் ரீச் ஆகி இருப்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. தோனி சார் என்னை பற்றி குறிப்பிட்டது என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு பெருமையாக நான் கருதுகிறேன்.

என்னுடைய ஒரு ஆசை என்னவென்றால் தோனி சார் அவர்கள் இந்த அரங்கூர் கிராமத்திற்கு வந்து என்னுடைய வீட்டை நேரில் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர தமிழக ரசிகருக்காக தோனி, அரங்கூர் கிராமத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.