தோனி இந்தியாவின் பிரதமர் வேட்பாளரா? பிரபல இயக்குனரின் டுவீட்

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை பிரித்து மேய்ந்து மிக எளிதில் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி சிஎஸ்கே அணியின் கட்டுப்பாட்டில் இருந்ததே வெற்றிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் தோனி எடுத்த சரியான முடிவுகள். ஐதராபாத் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணி என்றும், இரண்டாவது பவுலிங் செய்து பலமுறை அந்த அணி வெற்றி பெற்றுள்ளது என்று தெரிந்தும் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதேபோல் விக்கெட்டுக்களை வீழ்த்த அவர் மேற்கொண்ட வியூகமும் சிறப்பானது.

இந்த நிலையில் தோனியின் இந்த திறமை விளையாட்டோடு நின்றுவிட கூடாது என்றும், அவரை இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக மாற்றி அவரது ஆளும் திறமையை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் எதிர்ப்பும், ஆதரவும் இருந்தாலும் ஒருவர் டுவிட்டர் பயனாளி, தோனியை விளையாட்டுத்துறை அமைச்சராக்கினால் இந்தியா விளையாட்டுத்துறையில் பெரிய அளவில் சாதிக்கும் என்று கருத்து கூறியுள்ளார். ஏற்கனவே நவ்ஜோத்சித்து போன்றவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அரசியல்வாதியாக மாறியுள்ள நிலையில் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தமிழகம் முழுவதும் வலம் வரும் 'கோலி சோடாவின்' ஜிஎஸ்டி வண்டி

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தின் புராமோஷனும் ரொம்ப முக்கியம். நல்ல படங்கள் கூட சிலசமயம் சரியான புரமோஷன் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளன

மூன்றாவது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்ற 'இரும்புத்திரை'

தற்போதைய திரைப்படங்கள் 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடுவதே பெரிய விஷயம் என்ற நிலையில் 'இரும்புத்திரை' 3வது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

'ஒரு குப்பைக் கதை' படத்தின் ஓப்பனிங் வசூல் நிலவரம்

நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமான 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

ஜிவி பிரகாஷின் 'செம' படத்தின் செமையான ஒப்பனிங் வசூல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' என்ற வெற்றி படத்தை அடுத்து அவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'செம' திரைப்படமும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில்

'மெர்சல்' படத்தை அடுத்து 'காலா' படத்திற்கு கிடைத்த பெருமை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் படம் என்பதும் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி விஜய்யின் வெற்றிப்படமாக அமைந்தது என்பதும் தெரிந்ததே