ஜடேஜா குறித்து அன்றே சொன்னார் தோனி

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றது. 

இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க இருந்த நிலையில் வினய்குமார் பந்துவீச வந்தார். 

முதல் நான்கு பந்துகளில் 13 ரன்கள் எடுத்த சென்னை அணி மீதியிருக்கும் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் 5வது பந்தில் சிக்ஸர் அடித்து ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த நிலையில் ஜடேஜா குறித்து தல தோனி தனது டுவிட்டரில் ஒருசில வருடங்களுக்கு முன்னர் செல்லமாக கலாய்த்த டுவீட்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது. அந்த டுவீட்டில் தோனி, 'ஜடேஜா சார் அவர்களிடம் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அவர் இரண்டு ரன்களை அடித்து ஒரு பந்தை மீதமும் வைத்திருப்பார் என்று கூறியிருந்தார்.

More News

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்

ஐபிஎல் போட்டிக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

உலகின் அதிக பார்வையாளர்களை பெற்ற யூடியூப் வீடியோ திடீர் மாயம்

யூடியூப் இணையதளத்தில் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோக்கள் Vevo யூடியூப் அக்கவுண்டில்தான் உள்ளது. இதில் உள்ள மியூசிக் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

வன்முறையின் உச்சகட்டமே இதுதான்: ரஜினிகாந்த்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.

போயிறுவியா என் ஏரியாவ தாண்டி: சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் 

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 203 என்ற இலக்கை விரட்டியடித்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

சீமான் அவர்களே நீங்கள் செய்வது தவறு! தாக்கப்பட்ட தோனி ரசிகர் ஆவேசம்

சென்னை மற்றும் கொல்கத்தா அணியின் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த தோனியின் தீவிர ரசிகர் சரவணன், தனது உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் தோனி என்ற எழுத்துடன் போட்டியை பார்க்க சென்றார்.