ஜடேஜா குறித்து அன்றே சொன்னார் தோனி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றது.
இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க இருந்த நிலையில் வினய்குமார் பந்துவீச வந்தார்.
முதல் நான்கு பந்துகளில் 13 ரன்கள் எடுத்த சென்னை அணி மீதியிருக்கும் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் 5வது பந்தில் சிக்ஸர் அடித்து ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த நிலையில் ஜடேஜா குறித்து தல தோனி தனது டுவிட்டரில் ஒருசில வருடங்களுக்கு முன்னர் செல்லமாக கலாய்த்த டுவீட்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது. அந்த டுவீட்டில் தோனி, 'ஜடேஜா சார் அவர்களிடம் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அவர் இரண்டு ரன்களை அடித்து ஒரு பந்தை மீதமும் வைத்திருப்பார் என்று கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com