அடுத்த வருஷம் என்ன பிளான்? தோனியின் பதிலால் உற்சாகமடைந்த ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பதவியில் அடுத்த ஆண்டும் தொடருவேன் என்று மகேந்திரசிங் தோனி நேற்று ஒருபேட்டியில் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 40 வயதாகும் தோனி சிஎஸ்கே அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுக் கொடுத்துவிட்டு ஐபிஎல் தொடரை விட்டு விலகிவிடுவார் என்று சில ரசிகர்கள் அச்சதை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையடுத்து நேற்றைய ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியின்போது தோனியிடம் வர்ணனையாளர் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அதில் கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு ஏற்ப முழு தகுதியுடன் இருக்கிறது எனத் தோனி தெரிவித்தார். மேலும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமீரகம் என ஐபிஎல் தொடர் எங்கு நடைபெற்றாலும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பதற்கு நன்றி எனவும் கூறினார். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது போன்ற ஒரு வரவேற்பை ரசிகர்கள் துபாய் அரங்கில் கொடுத்தாக நெகிழ்ச்சியடைந்தார்.
இதையடுத்து சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக திகழ்கிறதே… என்று வர்ணனையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தோனி ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிகமுறை தோல்வியடைந்த அணியும் சிஎஸ்கே அணிதான் என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
மேலும் சிஎஸ்கே டீமிற்கு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறீர்கள் என்று வர்ணனையாளர் கூறியதற்கு பதிலளித்த தோனி “நான் இன்னும் விட்டுச் செல்லவில்லையே!...“ என உற்சாகமிக்க சிரிப்புடன் கூறிவிட்டு தனது உரையாடலை முடித்துக்கொண்டார். இந்தக் கருத்து தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மூலம் சிஎஸ்கே அணியை அவர் வலிமைப் படுத்துவார் என்றும் தனக்குப் பின்பு ஒரு வலிமையான அணியை உருவாக்கிவிட்டுதான் அவர் சிஎஸ்கே கேப்டன்சியில் இருந்து விலகுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout