போட்டியை முடிக்க தல தோனி எந்த ஆர்டரில் களமிறங்க வேண்டும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், கேப்டனாக இல்லாத போதும், ஐபிஎல் போட்டியின்போது மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்றால் அது தல தோனிதான். கடைசி நேரத்தில் இக்கட்டான நிலையில் அணி இருந்தாலும் பதட்டமே இன்றி பந்துகளை எதிர்கொண்டு மேட்சை வெற்றி பாதைக்கு கொண்டு செல்பவர்களில் தோனி எப்போதுமே நம்பர் ஒன் தான்.
இந்த நிலையில் இம்மாதம் 7ஆம் தேதி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் முதல் போட்டியில் மோதவுள்ளது. குருவும் சிஷ்யருமான தோனியும், ரோஹித்சர்மாவும் களத்தில் எதிரெதிராக சந்திக்கவுள்ள இந்த போட்டியில் தல தோனி 4வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என தெரிகிறது. அதாவது ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா, நான்காவதாக தோனி இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தோனியின் சிஎஸ்கே படையில் முரளி விஜய், ரெய்னா, பிராவோ, கேதார் ஜாதவ் ராயுடு உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், நிகடி, மார்க் வுட், தாக்கூர், ஷேன் வாட்சன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் ஃபார்மில் இருப்பதால் சிஎஸ்கே அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதில் தல தோனிக்கு அதிக சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com