தோனியின் தமிழ்.. அழகாகத்தான் இருக்குது..!

தல தோனி தமிழில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தோனியின் தமிழ் பேச்சு அழகாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தல தோனி தமிழ்நாட்டு மக்களில் ஒருவராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வரும் போதெல்லாம் அவர் தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்வார் என்பதையும் சில விளம்பரங்களில் தமிழில் அவர் பேசி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அவர் தமிழில் பேசுவதை தொகுத்த வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தோனியின் தமிழ் பேச்சு அழகாகத்தான் இருக்கிறது என்று கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் முதல் படம் தமிழ்ப்படம் என்பதால் அவருக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வைத்திருக்கும் பாசத்தை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.