தல தோனிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வரும் 16ஆம் தேதி சென்னையில் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் 21ஆம் தேதி துபாய் கிளம்பி செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் 8 அணியில் உள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போட்டியில் கலந்துகொள்ள ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு செல்வதற்கு முன்னர் நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது
இதனை அடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்கள் தனது ராஞ்சியில் உள்ள வீட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு அரசு அங்கீகாரம் பெற்ற குரு நானக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கூட பிரதிநிதிகள் பரிசோதனை மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த பரிசோதனையின் முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தோனி உள்பட அனைத்து வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனைகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அவர்கள் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout